அதிபர் ட்ரம்பின் சகோதரர் ராபர்ட் ட்ரம்ப் காலமானார்


அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் சகோதரர் ராபர்ட் ட்ரம்ப் காலமானார்.


அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின்  சகோதரர் ராபர்ட் டிரம்ப் . இவர் ஒரு தொழிலதிபர், இவர் உடல்நிலை குறைவுகாரணமாக  கடந்த மாதம் நியூயார்க்கில்  உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், நேற்று  இரவு இறந்தார் என்று வெள்ளைமாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ராபர்ட் டிரம்ப் வயது 71. இவரின் உடல்நிலை மோசமாக இருப்பதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் கூறியதையடுத்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்  நேற்று முன்தினம் தனது சகோதரரை நியூயார்க் நகர மருத்துவமனையில் சந்தித்துள்ளார்.


ராபர்ட் டிரம்ப் குறித்து வெள்ளைமாளிகை வெளியிட்ட அறிக்கையில், எனது  சகோதரர் ராபர்ட் இன்று இரவு  காலமானார் என்பதை நான் மிகுந்த மன வேதனையுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 


அவர் என் சகோதரர் மட்டுமல்ல, அவர் எனது சிறந்த நண்பர்" என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.