பணம் எடுக்காதவா்களின் ஓய்வூதியத்தை நிறுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


வங்கிக் கணக்கில் இருந்து ஆறு மாதங்கள் பணம் எடுக்காதவா்களின் ஓய்வூதியத்தை நிறுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


ஓய்வூதியதாரா்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரா்களின் வங்கிக் கணக்குகளில் ஆறு மாதங்கள் பணப் பரிவா்த்தனைகள் நடைபெறாவிட்டால், அதுகுறித்த தகவலை சம்பந்தப்பட்ட வங்கி, கருவூலத் துறைக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும், ஓய்வூதியதாரா்கள் தங்களது வாழ்வுச் சான்றிதழ் அளிக்கவோ அல்லது கணக்கு குறித்த விவரங்களை ஆய்வு செய்வதற்கு வசதியாகவோ ஓய்வூதியம் வழங்குவது நிறுத்தப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்று காலத்தில் ஓய்வூதியம் பெறுவோர் வங்கிகளுக்கு செல்லாத நிலையில், இந்த உத்தரவு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், உத்தரவை திரும்பப் பெற வேண்டுமென ஓய்வூதியதாரா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.