மத்திய சுகாதார அமைச்சகத்தின் இ-சஞ்சீவனி சேவையின் மூலம் 2 லட்சம் மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
______________________________
தமிழ்நாட்டில் பள்ளிகள் திறக்கப்படும் வரை மாணவர்களுக்கு உலர் உணவுப்பொருட்களை வழங்க, மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
___________________________
ஏர்டெல், வோடபோன் நிறுவனங்கள் 5ஜி தொலைத்தொடர்பு சேவைக்கான அலைக்கற்றையை பெற மத்திய அரசிற்கு சீன நிறுவனங்களின் பெயர்கள் இல்லாத புதிய விண்ணப்பங்களை அனுப்ப உள்ளன.
___________________________
தொடர்ந்து 4-வது ஆண்டாக இந்தியாவின் மிக தூய்மையான நகரமாக மத்தியப்பிரதேச மாநிலத்தின் இந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற அமைச்சகம் தெரிவித்துள்ளது.
_____________________________
டெல்லியில் இடைவிடாத கனமழையை தொடர்ந்து பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.
______________________________
இருமொழி கொள்கைதான் தமிழக அரசின் கொள்கை முடிவு என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
_______________________________
தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
_________________________________
விநாயகர் சிலைகளை நிறுவி வழிபட தமிழக அரசு பிறப்பித்த தடையை நீக்க மதுரை ஐகோர்ட் கிளை மறுப்பு தெரிவித்துள்ளது.
_____________________________
மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் செய்யும் பணிகளின் பட்டியலில், மூலிகை செடிகள் வளர்ப்பதையும் ஆயுஷ் அமைச்சகம் சேர்த்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,008 குறைந்து ரூ.40,320க்கு விற்பனையாகிறது.
170 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்:
வேலூர், திருப்பத்தூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் 18,000-த்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு சுமார் 170 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்கினார். மூன்று மாவட்டங்களிலும் பணி முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்ததுடன், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.