இன்று நாடுமுழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதைதொடர்ந்து டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் மோடி மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
செங்கோட்டைக்கு வருவதற்கு முன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மரியாதை செலுத்திய பின்னர் செங்கோட்டை சென்றார்.
டெல்லி செங்கோட்டைக்கு பிரதமர் மோடி வந்தடைந்துள்ளார். செங்கோட்டை வந்தடைந்த பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்பு அளித்தனர். 74-ம் ஆண்டு சுதந்திர தின விழாவை ஒட்டி முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை மோடி ஏற்றார்.