முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்


முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜிஆகஸ்ட் 10- ஆம் தேதி டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூளையில் இருந்த சிறிய கட்டி அகற்ற செய்ய அறுவை சிகிச்சை நடைபெற்றது.


அப்பொழுது, பிரணாப் முகர்ஜிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பிரணாப் முகர்ஜிக்கு வென்டிலேட்டரில் மூலம்  சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.


இந்நிலையில், வெளியிட்ட அறிக்கையில், பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை மோசமடைந்து அவர் நுரையீரல் தொற்று காரணமாக செப்டிக் அதிர்ச்சியில் இருக்கிறார் என்று ராணுவ மருத்துவமனை தெரிவித்த நிலையில், தற்போது முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி காலமானார்.


இதை அறிந்த  குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்த் தனது ட்வீட்டர் பக்கத்தில், "முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மரணத்தை அறிந்து மிகவும் வருத்தமாக இருக்கிறது, பொது வாழ்க்கையில்  மகத்தான அவர் அன்னை இந்தியாவுக்கு சேவை செய்தார். தேசம் தனது தகுதியான மகன்களில் ஒருவரை இழந்துவிட்டது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அனைத்து குடிமக்களுக்கும் இரங்கல் என ட்வீட் செய்துள்ளார்.