தமிழக்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.


தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.


வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மதுரை, சிவகங்கை, சேலம், தர்மபுரி, புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.


திருவள்ளூர் வேலூர் ராணிப்பேட்டை திருப்பூர் திருவண்ணாமலை காஞ்சிபுரம் திருச்சி செங்கல்பட்டு உள்ளிட்ட 21 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.