தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதன் விளைவாக கொரோனாவை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5,975 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று மாவட்ட ஆட்சியர்களுடன், தலைமை செயலாளர் சண்முகம் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார் .இன்று பிற்பகல் 3 மணிக்கு காணொளி மூலம் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா தடுப்பு பணி தொடர்பாக ஆலோசிக்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.