கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 31ம் தேதி உள்ளூர் விடுமுறை

 கேரளாவில் எல்லா வருடமும் விமர்சையாக கொண்டாடப்படும் பாரம்பரிய திருவிழாக்களில் ஒன்று ஓணம். இந்த வருடம் கொரோனா பாதிப்பு காரணமாக பல கட்டுபாட்டுகளை அரசாங்கம் விதித்துள்ளது. ஆம் வீடுகளில் மட்டும் ஓண விழாவை கொண்டாட வேண்டும் என்றும் , பொது இடங்களில் ஓணம் நிகழ்ச்சிகளை நடத்த கூடாதும் என்றும் கூறி கேரள அரசு தடை விதித்துள்ளது.


இந்த நிலையில் கேரளாவிற்கு அருகிலுள்ள கன்னியாகுமரி மாவட்டத்திலும் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவார்கள்.


அந்த வகையில் ஓணம் பண்டிகையான ஆகஸ்ட் 31-ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளதாகர மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு. வடநேரே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.


மேலும் இந்த விடுமுறை தினத்திற்கு ஈடாக வேலை நாள் ஒன்று பின்னர் தனியாக அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.