மேஷம் : நம்பிக்கை நிறைந்த நாள். உங்கள் இலக்குகளை நிறைவேற்றி கொள்வீர்கள். புதிய தொடர்புகள் கிடைக்கும். உங்கள் நட்பு வட்டாரம் பெரிதாகும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார்
ரிஷபம் : உங்கள் முயற்சியில் வெற்றி பெற நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் தன்னம்பிக்கை அதற்கு உதவியாக இருக்கும். கடினமான சூழ்நிலைகளை சமாளிக்க பிரார்த்தனை மேற்கொள்ள வேண்டும்.கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும்.
மிதுனம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. நீங்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது நல்லது. விவேகத்துடன் நடந்து கொள்ள வேண்டும்.சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியா வசிய செலவுகள் அதிகரிக்கும்
கடகம் : இன்றைய நாள் துடிப்பானதாக இருக்கும். உங்கள் இலக்குகளை எளிதாக அடைவீர்கள். இன்று சரியான முடிவுகளை எடுப்பீர்கள். அது உங்களுக்கு பயனுள்ளதாக அமையும்.கணவன்-மனைவிக்குள் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும்.
சிம்மம் : இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள்.உங்கள் புத்திசாலித்தனம் மூலம் வெற்றி கிடைக்கும்.தொட்டது துலங்கும் நாள்.
கன்னி : இன்று நீங்கள் பதட்டமாக இருப்பீர்கள். வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக அமையாது. சவாலான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டும். பிறரை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும்.
துலாம் : முக்கிய முடிவுகள் எடுக்க ஏற்ற நாள். புத்திசாலித்தனத்துடன் பொறுமையாக விஷயங்களை கையாளவேண்டும்.எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். பணப் பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள்
விருச்சிகம் : உங்கள் வளர்ச்சி குறித்து உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்க வாய்ப்புள்ளது. அது உங்களுக்கு வளர்ச்சியை தரும். இன்று நீங்கள் ஆற்றலுடனும் உற்சாகத்துடனும் காணப்படுவீர்கள். முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள்.குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும்
தனுசு : குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். . சில சௌகரியங்கள் நீங்கள் விட்டு கொடுக்க வேண்டியிருக்கும். இன்று நீங்கள் பாதுகாப்பில்லாத போல உணர்வீர்கள். நல்ல பலன்கிடைக்கும் நாள். நீங்கள் திட்டமிட்டு செயல்பட வேண்டும்.
மகரம் : ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு மூன்று முறை முயன்று முடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். உங்களுக்கு விருப்பமான பலன்கள் கிடைக்க ஏற்ற நாள். பாதகமான விளைவுகள் ஏற்படாமலிருக்க சிந்தித்து செயல்பட வேண்டும். இசை கேட்பது பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுவது மன ஆறுதலை தரும்.
கும்பம் : இன்று நீங்கள் பாதுகாப்பு இல்லாதது போல உணர்வீர்கள். ஆன்மீக ஈடுபாடு உங்களுக்கு மன ஆறுதலை தரும். சில சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும்.குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும்
மிதுனம் : குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும்.உங்களின் சுய முயற்சி மூலம் முன்னேறுவதற்கு வாய்ப்பு இருக்கும். வெற்றி கிடைக்க உறுதியான அணுகுமுறை உதவியாக இருக்கும். உங்கள் இனிமையான வார்த்தைகள் நல்ல பலனை தரும்.
மோகனா செல்வராஜ்