ஆந்திராவில் பாதித்தோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்தது


ஆந்திராவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


ஆந்திர மாநிலத்தில் கடந்த சில தினங்களாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்த, அம்மாநில அரசு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.


இந்தநிலையில், அம்மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 9,652 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனால் அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,06,261 ஆக உயர்ந்துள்ளது. அதில் 88 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,820 ஆக உள்ளது.