விஜய் மல்லையா குற்றவாளி என்றஅறிவித்த தீர்ப்பு செல்லும்- உச்சநீதிமன்றம்


இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளில் இருந்து சுமார் ரூ.9 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் வாங்கிவிட்டு அந்த பணத்தை செலுத்தாமல் மோசடிசெய்துவிட்டு லண்டனுக்கு தப்பி விட்டவர் விஜய் மல்லையா. இதையடுத்து, இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டார்.


கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா மீது  சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். 


நீதிமன்ற உத்தரவை மீறி மகன் சித்தார்த், மகள்கள் தனியா, லியானா ஆகியோரின் வங்கிக் கணக்கிற்கு 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை  பணப்பரிமாற்றம் செய்ததாக எஸ்.பி.ஐ வங்கிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.


 வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு மல்லையா குற்றவாளி என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி மல்லையா தரப்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது.


நீதிமன்ற உத்தரவை மீறி பணப்பரிவர்த்தனை செய்ததால் விஜய் மல்லையா குற்றவாளி என அறிவித்த தீர்ப்பு செல்லும், மேலும், விஜய் மல்லையாவின் சீராய்வு மனுவை தள்ளுபடி செய்யப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.