இன்றைய நாள் (26.08.2020) எப்படி இருக்கும்

12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்மேஷம் : இன்று தவறுகள் நேராத வகையில் கவனமுடன் செயல்பட வேண்டும். உங்கள் பணிகளை வரிசைப்படுத்தி முறையாக திட்டமிட்டு செயல்பட வேண்டும்.வீண் விவாதங்களை தவிர்த்து விடுங்கள்


ரிஷபம் : புதிய நண்பர்கள் கிடைக்கும் நாள். அது பின்னாளில் உங்களுக்கு பயனளிக்கும். உங்கள் பணிகளில் நம்பிக்கையுடன் செய்லாற்றுவீர்கள்.கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.


மிதுனம் : இன்று உங்கள் அனைத்து முயற்சிகளும் வெற்றியில் முடியும். வாழ்வில் முன்னேற்றம் காண்பீர்கள். உங்களிடம் உள்ள ஆற்றல் மற்றும் மனஉறுதி காரணமாக நீங்கள் விரும்பியது கிடைக்கும்.நீண்டகால கடனை பைசல் செய்வீர்கள்.


கடகம் : நீங்கள் இன்று பொறுமையுடன் கடைபிடிக்க வேண்டிய நாள். திட்டமிட்டு திறமையுடன் செயல்பட வேண்டும். ஆன்மீக பயணம் மேற்கொள்வீர்கள்.தடைகள் நீங்கும். குடும்பத்தில் மதிப்பு உயரும். 


சிம்மம் : நீங்கள் பொறுமையாக செயல்பட்டால் வெற்றி அடையலாம். உங்கள் புத்திசாலித்தனத்தை பொறுத்து வளர்ச்சி அமையும். கவனமுடன் செயல்பட வேண்டும்.விருந்தினர் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும்


கன்னி : உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். நீங்கள் இன்று மகிழ்ச்சியாகவும், உற்சாகமாகவும் காணப்படுவீர்கள்.சோம்பல், அசதி நீங்கும். தடைபட்ட வேலைகளை உடனே முடிப்பீர்கள். 


துலாம் : இன்றைய செயல்களை திட்டமிட்டு செயல்பட்டால் சிறப்பானதாக மாற்றலாம். உங்கள் மனதில் மகிழ்ச்சி குறைந்து காணப்படும். அமைதியாக இருந்தால் மகிழ்ச்சி உண்டாகும். பொறுப்புகள் அதிகமாக இருக்கும்.பல நாட்களாக இழுத்தடித்த காரியங்களெல்லாம் இனி முடிவுக்கு வரும்.


விருச்சிகம் : நீங்கள் உற்சாகத்துடன் செயல் பட வேண்டிய நாள். பொறுமையுடன் செயல்களை செய்ய வேண்டும். உடன் பிறந்தவர்களுடன் சிறு மனஸ்தாபம் ஏற்படலாம். ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து விடுங்கள்


தனுசு : எதிர்மறை எண்ணங்கள் உங்களிடத்தில் அதிகமாக காணப்படும். இதனை தவிர்த்தல் நல்லது. உற்சாகத்துடன் இருந்தால் நல்ல பலன் கிடைக்கும்.குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். பணவரவு உண்டு. 


மகரம் : இன்றையதினம் சிறப்பானதாக அமையும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் இன்று வெற்றி அடையும். அமைதி காக்க வேண்டும். பிரியமானவர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்


கும்பம் : உங்கள் தேவைகளை நீங்களாகவே பூர்த்தி செய்து கொள்வீர்கள். வருங்காலத்திற்காக திட்டமிட வேண்டும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்


மீனம் : முன்னேறுவதற்கு நீங்கள் அதிக முயற்சி எடுக்க வேண்டும். அது உங்கள் பாதுகாப்பின்மை உணர்வை அகற்றும். உற்சாகமாக உங்களை நீங்களே வைத்திருங்கள்.வீடு, மனை, வாகனம் வாங்கும் காலம் கனிந்து வரும்.


மோகனா செல்வராஜ்