அருணாச்சலப் பிரதேசத்தில் நிலநடுக்கம்


இன்று அதிகாலை அருணாச்சல பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் (என்.சி.எஸ்) தெரிவித்துள்ளது.


அஞ்சாவ் மாவட்டத்தில் ரிக்டர் அளவுகோலில்  3.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று அதிகாலை 3:36 மணிக்கு  ஏற்பட்டதாக கூறப்படுகிறது.


இதற்கு முன் ஆகஸ்ட் 6 -ஆம் தேதி, மாநிலத்தில் தவாங்கிலிருந்து 42 கிலோமீட்டர் தொலைவில் 3.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.