புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்திய அரசாணை ரத்து


பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை உயர்த்திய அரசாணை ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு


புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் வரியை உயர்த்தி அம்மாநில அரசு பிறப்பித்த உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது. மதிப்புக்கூட்டு வரி சட்டத்தின் பிரிவு 33-ஐ பயன்படுத்தி பெட்ரோல், டீசல் மீது வரியை உயர்த்தியது செல்லாது என தீர்ப்பளித்துள்ளது.


வரி உயர்வை எதிர்த்து பாமக நிர்வாகி தேவமணி தொடர்ந்த வழக்கில் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.