புதுச்சேரியில் 18.08.2020  முதல் 19.8.2020 முதல் முழு ஊரடங்கு அமல்


புதுச்சேரியில் இன்று 18.08.2020  முதல் நாளை 19.8.2020  காலை வரை முழு ஊரடங்கு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை கட்டுப்படுத்த ஆராய பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.தற்போது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் உள்ளது.கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.


இந்நிலையில் புதுச்சேரியில் இன்று  காலை 6 மணி முதல் புதன் கிழமை காலை 6 மணி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.


மேலும், மருந்து கடைகள், பால் நிலையங்களை தவிர பிற கடைகள் செயல்பட அனுமதி இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.