12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் 21/08/2020


மேஷம்: சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். கவனமுடன் செயல்பட வேண்டியது அவசியம். நெருக்கமானவர்களுடன் பேசுகையில் கவனமாக பேச வேண்டும். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம். வெளியூரிலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி வரும்.


ரிஷபம்:: உறவினர்களில் உண்மையானவர்களைக் கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வீண் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆதலால் சிந்தித்து பேச வேண்டும். விட்டுக்கொடுத்து வாழ வேண்டும். எதனையும் பெரிதாக எடுத்து கொள்ள வேண்டாம்.பழைய சிக்கலில் ஒன்றுக்கு தீர்வு காண்பீர்கள்.


மிதுனம்: இன்றைய நாள் மகிழ்ச்சிகரமாக அமையும். செயல்களை கவனமுடன் ஆற்றுவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும் நாள். இன்றைய நாளை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்.எதையும் புதிய கோணத்தில் சிந்திப்பீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை விரைந்து முடிப்பீர்கள்.


கடகம்: தாய்வழி உறவினர்கள் மதிப்பார்கள். சுபநிகழ்ச்சிகளாலும், விருந்தினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும். இன்றைய பதட்டத்தை சமாளிக்க அமைதியாக செயல்பட வேண்டும். அது உங்களுக்கு திருதியை தரும்.சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக அமையும்.




சிம்மம்: மனைவிவழியில் மதிப்பு கூடும். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள்.  நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும்.இன்று வீண் வாக்குவாதங்கள் ஏற்படும் நாள். அது உங்களுக்கு கவலையை தரும். பொறுமையாக இருப்பது சிறந்தது.


கன்னி: பழைய பிரச்சினைகள் மீண்டும் தலைதூக்கும். கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். உறவினர், நண்பர்களின் பேச்சும், செயல்பாடுகளும் எரிச்சலை ஏற்படுத்தும்.இன்றைய நாள் மகிழ்ச்சியாக இருக்காது. பொறுமையாக செயல்பட்டால் நல்லது நடக்கும். எதையோ இழந்தது போல உணர்வீர்கள். தியானம் மேற்கொள்வது மன ஆறுதலை தரும்.


துலாம்: வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். சோர்வு, மன உளைச்சல் ஏற்படும்.  இன்றைய நாள் சிறப்பானதாக அமையும். உங்கள் முயற்சி வளர்ச்சி தரும் நாள். உங்களின் மன உறுதி வெற்றியை தேடித்தரும்.பண விஷயத்தில் கறாராக இருங்கள். அநாவசிய செலவுகளை தவிர்த்து விடுங்கள்.


விருச்சிகம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். இன்றைய நாள் சமநிலையாக இருக்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும் நாள். அதிர்ஷ்டம் உள்ள நாள். இன்றைய தினம் திருப்திகரமாக இருக்கும். புதியவர்களின் நட்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். கலைப்பொருட்கள் சேரும்.




தனுசு:  ஆன்மீகத்தில் ஈடுபடுவது இன்று உங்களுக்கு மன ஆறுதலை தரும். கவனமுடன் பேச வேண்டும். உங்கள் நண்பர்களை சந்திக்க வேண்டாம். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். விஐபிகளின் சந்திப்பு நிகழும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள்.


மகரம்: பிரச்சினைகளின் ஆனிவேரை கண்டறிவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். புண்ணிய தலங்கள் சென்று வருவீர்கள். ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.எளிய பணிகள் கூட செய்வது கூட கடினமாக தோன்றும். உங்கள் ஆற்றல் குறைந்து காணப்படும். விளைவுகள் பாதகமாக வாய்ப்புள்ளது.


கும்பம்: எதிலும் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுங்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள்.இன்றைய நாள் உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். சமநிலையோடுசெயல்படுவீர்கள். புதிய நண்பர்களை கிடைப்பார்கள்.


மீனம்: சுபநிகழ்ச்சிகளில் குடும்பத்துடன் கலந்து கொள்வீர்கள். புது நட்பு மலரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறுவீர்கள்.இன்று அதிர்ஷ்டமுள்ள நாள். உங்கள் முயற்சியில் வெற்றி கிடைக்கும். புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி இன்றைய நாளை சிறப்பானதாக மாற்றிக்கொள்ளலாம்.


மோகனா  செல்வராஜ்  










அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.