12 ராசிகளுக்கும் உரிய பலன்கள் 20/08/2020



 


மேஷம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். வாகனம் செலவு வைக்கும்.இன்று அமைதி இழந்து பாதுகாப்பு இல்லாதது போல உணர்வீர்கள். தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். வெற்றிபெற உற்சாகமாக செயல்பட வேண்டும்.


ரிஷபம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வீடு, வாகன பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வெளிவட்டாரத் தொடர்புகள் ஏற்படும். நவீன மின்சாதனங்கள் வாங்குவர்கள்.நன்றும் தீதும் கலந்து காணப்படும். நிச்சயமற்ற நிலை இருக்கும். பொறுமையுடன் இருந்தால் வெற்றி நிச்சயம்.


மிதுனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். உறவினர்களின் வருகையால் வீடு களைகட்டும். வாகனத்தை சீர் செய்வீர்கள்.பணிகள் அதிகமாக இருக்கும். உங்கள் இலக்குகளை அடைகின்ற முக்கிய முடிவுகளை எடுக்க ஏற்ற நாள்.


கடகம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். பணவரவு திருப்தி தரும்.உங்கள் இலக்குகளை அடைய கடுமையாக போராட வேண்டியிருக்கும். நம்பிக்கையுடன் திட்டமிட்டு செயல்படவேண்டும். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்.




சிம்மம்: பழைய கசப்பான சம்பவங்களைப் பற்றி யாரிடமும் விவாதிக்க வேண்டாம். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். சகோதரரிடம் கருத்துவேறுபாடு ஏற்படும்.நீங்கள் பொறுமை இழந்து காணப்படுவீர்கள். அது உங்கள் வளர்ச்சியை பாதிக்கும். பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு நடந்து கொள்வது நல்ல பலனை தரும்.


கன்னி: யாருக்காகவும் ஜாமீன், உத்தரவாத கையெழுத்திட வேண்டாம். பழைய பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண முயற்சிப்பீர்கள். வாகனம் அடிக்கடி தொந்தரவு தரும்.நீங்கள் அமைதி இழந்து உணர்ச்சிவசத்துடன் காணப்படுவீர்கள். இன்று சமநிலையோடு இருக்கவேண்டும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது உங்களுக்கு ஆறுதலை தரும்.


துலாம்: விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.கடுமையாக முயற்சித்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டமான நாள். விரைந்து முடிவெடுப்பீர்கள். இன்றைய நாள் மகிழ்ச்சிகரமாக அமையும்.


விருச்சிகம்: எந்தப் பிரச்சினைகளையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். திடீர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள்.உங்கள் இலட்சியங்களை அடைய இன்று ஏற்ற நாள். மகிழ்ச்சியான தருணங்கள் காணப்படும். முக்கிய முடிவுகள் நல்ல பலனை தரும்.




தனுசு: இன்று சுமாரான பலன்களே கிடைக்கும். நீங்கள் கடினமான சூழ்நிலையை சமாளிக்க ஆற்றலை வளர்த்து கொள்ள வேண்டும். ஆன்மீகத்தில் ஈடுபடுவது மன ஆறுதலை தரும்.உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப்பூர்வமாக செயல்படுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். கலைப்பொருட்கள் சேரும்.


மகரம்: உங்களுடைய பலம், பலவீனத்தை உணர்ந்து செயல்படுவது நல்லது. சில காரியங்களை பலமுறை முயன்று முடிப்பீர்கள். தாயாரின் உடல்நலனில் கவனம் தேவை.இன்று பதட்டமான சூழ்நிலை காணப்படும். பொறுமையாகவும் மன உறுதியுடனும் செயல்படவேண்டும். அமைதியான அணுகுமுறையுடன் கையாள வேண்டும்.


கும்பம்: குடும்பத்தினருடன் ஆரோக்கியமான விவாதங்கள் வந்து போகும். கருத்து வேறுபாடால் பிரிந்த உறவினர்கள் திரும்பி வருவார்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும்..முன்னேறுவதற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நல்ல பலனை கொடுக்கும்.


மீனம்: உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. சொத்து தொடர்பான வழக்கில் வெற்றி பெறுவீர்கள்.உங்கள் லட்சியங்களை அடைவதற்கு இன்று ஏற்ற நாள். எச்சரிக்கையுடனும் விவேகத்துடனும் செயல்பட வேண்டும். புத்திசாலித்தனத்துடன் செயல்படுவது நல்ல பலனை தரும்.


மோகனா  செல்வராஜ் 










அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.