ஆதாரில் மாற்றம் செய்ய ரூ.100 கட்டணம்


ஆதார் அட்டையில் மாற்றம் செய்ய ஆதார் பதிவு மையம் (ஆதார் சேவா கேந்திரா) மூலமாகவோமோ, ஆன்லைன் மூலமாகவோ  மாற்றம் செய்து கொள்ளலாம். இதற்கான கட்டணத்தை தற்போது யுஐடிஏஐ நிர்ணயித்து உள்ளது.


அதன்படி, முகவரி திருத்தங்களுக்கு 50 ரூபாயும், பயோமெட்ரிக் திருத்தங்களுக்கு 100 ரூபாயும், இதுதவிர ஒன்றுக்கு மேற்பட்ட திருத்தங்களுக்கு 100 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும்.


எந்த ஆவணங்களும் இல்லாமல் ஆதாரில் சில மாற்றங்களைச் செய்யலாம். மொபைல் எண், ஆதார் அட்டையில் உள்ள புகைப்படம் ஆகியவற்றை   ஆவணமும் இல்லாமல் மாற்றம் செய்யலாம்.