ரகுமான்கான் திமுகவின் இடி முழக்கம் ஓய்ந்தது


என்ன பாய்.. பாசத்துடன் அழைத்து மகிழ்ந்த கருணாநிதி.. மறைந்து போனதே அந்த இடி, மின்னல், மழை


எம்ஜிஆருக்கு சிம்மசொப்பனமாக இருந்த ரகுமான்கான்


திமுகவை அண்ணா தொடங்கிய பிறகு, அதில் மாணவராக அடியெடுத்து வைத்தவர் ரகுமான்கான். சென்னை சட்டக் கல்லூரியில் துரைமுருகன், முரசொலி செல்வம் உள்ளிட்டோருடன் இணைந்து ரகுமான்கான் நடத்திய போராட்டம் அரசியலில் அவரை உயரத்துக்கு கொண்டு சென்றது.


சட்டப்பேரவை முன்னாள் தலைவர் காளிமுத்து, கவிஞர் நா.காமராசன், முன்னாள் துணைவேந்தர் ராமசாமி ஆகியோருடன் இணைந்து இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் மிகத் தீவிரமாக ஈடுபட்டார் ரகுமான்கான். இதன்மூலம் கருணாநிதியின் மனதில் இடம்பிடித்தார்.


இந்தி எதிர்ப்பின் ஒரு பகுதியாக நடந்த சட்டநகல் எரிப்பு போராட்டத்திலும் பங்கேற்று சிறை சென்றார். ரகுமான்கானின் மேடைப் பேச்சில் இலக்கியமும், உலக வரலாறும் அருவியாகக் கொட்டும். அவரது வார்த்தை வீச்சில் வந்து விழும் புள்ளிவிவரங்கள் எதிரிகளை தெறிக்கவிடும்.


1977 முதல் 1988 வரை அவர் எம்எல்ஏவாக இருந்தபோது திமுக எதிர்க்கட்சியாக இருந்தது.


தொடர்ந்து தேர்தல்களில் வென்று எம்ஜிஆர் புகழின் உச்சியில் இருந்த காலகட்டம். அப்போது ரகுமான்கான், துரைமுருகன், க.சுப்பு ஆகிய மூவரும்சட்டப்பேரவையில் தங்களதுபேச்சாற்றலால் எம்ஜிஆர் அரசுக்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.

அமைச்சர்களை நோக்கி மூவரும் வீசிய கேள்விக் கணைகளால் அரசுக்கு பலநேரங்களில் தர்மசங்கடமான நிலை ஏற்பட்டது.


ரகுமான்கான், துரைமுருகன், க.சுப்பு மூவரும் திமுகவின் இடி, மின்னல், மழை என்று அழைக்கப்பட்டனர்.


அதில் இடிமுழக்கமாக முழங்கிய ரகுமான்கான், எம்ஜிஆர் அரசுக்கு சட்டப்பேரவையில் சிம்மசொப்பனமாக விளங்கினார். 13 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாவிட்டாலும் திமுகவை கட்டுக்கோப்புடன் கருணாநிதி வழிநடத்த, ரகுமான்கான் போன்ற தளபதிகளே காரணம்.


5 முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்த ரகுமான்கான், 1996-ம் ஆண்டு முதல்வராக இருந்த கருணாநிதி அமைச்சரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சரானார். திமுகவின் தலைமை செய்தித் தொடர்பாளராக இருந்தார். தமிழக அரசின் சிறுசேமிப்பு திட்ட ஆலோசனை குழுவின் துணை தலைவராக இருமுறை பதவி வகித்தார்.


பாஜகவுடன் திமுக கூட்டணி அமைத்த காலகட்டத்தில், முஸ்லிம்களிடம் திமுகவுக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. அப்போது முஸ்லிம் சமூக தலைவர்கள், அமைப்புகளிடம் திமுக தரப்பு நியாயங்களை எடுத்துக் கூறி எதிர்ப்பு உணர்வை தணித்தார் 

தம்பிக்கு, பாசம் நிறைந்த “அண்ணனாக” என்னிடம் கடைசியாகச் சொன்ன வார்த்தை - “தம்பி, உங்கள் உடல்நலத்தைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள்; நீங்கள் நலமாக இருப்பதுதான் இன்று இந்த நாட்டுக்கு இப்போது தேவை” என்று பிறப்பித்த அன்புக் கட்டளைதான்.


முத்தமிழறிஞர் கலைஞரின் "போர்வாளான" முரசொலியில் இனி அண்ணன் ரகுமான்கான் எழுதும் கட்டுரைகளை எங்குபோய்த் தேடிப் படிப்பேன்

 

கருணாநிதியைத் தொடர்ந்து ஸ்டாலினுக்கு ஆதரவாக இருந்தார். அவரது மறைவு திமுகவுக்கு பேரிழப்பு என்பதில் சந்தேகம் இல்லை.