லண்டனில் நடைபெற்ற உலகில் மனதில் அதிவேகமாக கணக்கு போடுவார்களுக்கான சாம்பியன்ஷிப் போட்டியான Mental Calculation World Championship போட்டி லண்டனில் சமீபத்தில் நடைபெற்றது.
இதில், இந்தியா சார்பாக ஹைதராபாத்தை சேர்ந்த நீலகந்த பானு பிரகாஷ் என்கிற இருபது வயது இளைஞன் பங்கேற்றார்.
அந்த போட்டியில் உலகின் அதிவேகமான மனித கால்குலேட்டர் என்கிற பட்டத்தை தனதாக்கி கொண்டு தங்கப்பதக்கத்தையும் வென்றுள்ளார். ஹைதராபாத்தை சேர்ந்த நீலகந்த பானு பிரகாஷ்.
இவர் இதுவரை உலகின் அதிவேக மனித கால்குலேட்டர் என 50 லிம்கா சாதனையையும், 4 உலக சாதனையையும் படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.