கோவை கொடிசியா வளாகத்தில் உபயோகித்த 'பிபிஇ கிட்'டுடன் சுற்றிய நாய்


கர்நாடக முதல்வர் அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதால் தன்னை ஐந்து நாட்கள் சுய தனிமை செய்து கொண்டார் எடியூரப்பா. இந்த நாட்களில் ஆன்லைன் மூலம் வீட்டிலிருந்தே பணியாற்றுவேன் என கூறியுள்ளார்.


கர்நாடக முதல்வர் எடியூரப்பா (77) பெங்களூருவில் தொற்று பரவலை தடுக்க 8 மண்டலங்களுக்கு பொறுப்பாளர்களாக 8 அமைச்சர்களை நியமித்துள்ளார்.


இந்த நிலையில் அவரது அலுவலக பணியாளர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், 5 நாட்கள் சுய தனிமை செய்துகொண்டிருப்பதாக அறிவித்துள்ளார். பயப்படும் படி ஒன்றும் இல்லை. வீட்டிலிருந்தே பணியாற்றுவேன். ஆன்லைன் வாயிலாக உத்தரவுகள் மற்றும் பரிந்துரைகளை அளிப்பேன் என டுவிட்டரில் கூறியுள்ளார்.



சென்னையில் ஜூலை 13-ம் தேதி முதல் ஐ.டி. நிறுவனங்கள் 50% ஊழியர்களுடன் இயங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகள் தவிர்த்து பிற இடங்களில் உள்ள ஐ.டி. நிறுவனங்கள் நிபந்தனைகளுடன் இயங்க ஜூலை 13-ம் தேதி முதல் ஐ.டி. நிறுவனங்கள் 50% அளித்துள்ளது.



சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிக்காக நியமிக்கப்பட்ட சிறப்பு அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சென்னை வடக்கு மண்டல கொரோனா தடுப்பு அதிகாரியாக கபில்குமார் சி.சரத்கரை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


தமிழகம் முழுவதும் 51 எஸ்.பி.க்களை அதிரடியாக பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது



கொடிசியா வளாகத்திற்கு கொரோனா நோயாளி ஒருவர் ஆம்புலன்சில் அழைத்துவரப்பட்டார். அவரை உரிய பாதுகாப்புடன் அறைக்குள் கூட்டிச் செல்லும் போது, ஆம்புலன்சில் இருந்த பயன்படுத்தப்பட்ட முகக்கவசம், பிபிஇ கிட் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள், கீழே விழுந்துள்ளன.


நோயாளியை அழைத்துச் செல்வதில் கவனம் செலுத்திய ஊழியர்கள், உபயோகித்த, 'பிபிஇ கிட்'டை அலட்சியமாக அங்கு விட்டுச் சென்றனர். அங்கு சுற்றித்திரிந்த நாய் அதைக் கவ்விச் சென்றது.


இதை நாய் கவ்விச் சுற்றுவதால் கொரோனா பரவல் மேலும் அதிரிக்கும் சூழல் உருவாகியுள்ளது' என, பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.


_____________________


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 82-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் இன்று 4,163 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 82,324-ஆக அதிகரித்துள்ளது.