குறுஞ்செய்திகள் - தீவிரமடையும் கொரோனா பாதிப்பு.


ஆந்திராவில் கடந்த 24 மணிநேரத்தில் 4, 944 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 58,668-ஆக அதிகரித்துள்ளது. கடந்த  24 மணி நேரத்தில் 62 பேர் உயிரிழந்துள்ள நிலையில் இதுவரை கொரோனாவால் பலியானவர்வர்களின் எண்ணிக்கை 758-ஆக அதிகரித்துள்ளது.


மேலும் 32,336 பேர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 25,574 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


தமிழகத்தில் மேலும் 4,965 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 1,80,643-ஆக உயர்ந்துள்ளது.  கர்நாடகாவில் நாளை முதல் ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். பொருளாதாரம் நலிவடைந்துள்ளதால் மக்கள் நாளை முதல் வேலைக்கு செல்ல வேண்டும். கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு பயன்தரவில்லை எனவும் கூறியுள்ளார்.