பிரியங்கா காந்தி-மத்திய அரசு உத்தரவு

 டெல்லி: ஆகஸ்ட் 1ம் தேதிக்குள் அரசு குடியிருப்பை காலி செய்யுமாறு காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்திக்கு மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.


காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மூத்த தலைவர் பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்ட எஸ்பிஜி சிறப்பு பாதுகாப்பு (Special Protection Group) கடந்த வருடம் நீக்கப்பட்டது.


மத்திய உள்துறை அமைச்சகம் இது தொடர்பாக பிரியங்கா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளது. அதில் உங்களுக்கு இசட் + பாதுகாப்பு எதுவும் வழங்கப்படவில்லை.


அதனால் மத்திய அரசின் கீழ் வரும் அரசு பங்களாக்களில் தங்க உங்களுக்கு அனுமதி இல்லை என்று அந்த கடிதத்தில் மத்திய அரசு குறிப்பிட்டுள்ளது.


அதோடு பிரியங்கா காந்தி 3.46 லட்சம் ரூபாயை இதற்காக மத்திய அரசிடம் செலுத்த வேண்டும். ஆகஸ்ட் 1ம் தேதிக்கு பிறகு பிரியங்கா காந்தி அந்த வீட்டில் தங்கி இருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.குடிசைப் பகுதிகளில் கொரோனா பரவலைத் தடுத்தாலே மற்ற பகுதிகளில் பாதிப்பு ஏற்படாது என  அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார். அரசின் புதிய கொரோனா தடுப்பு உத்திக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. 


கொரோனா காரணமாக அதிகரிக்கும் தற்கொலை.. திருப்பரங்குன்றம் திமுக எம்எல்ஏ கடும் கண்டனம்.. அறிக்கை!


விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 87 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. 


விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 34 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது


வேலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 3 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர் என்று மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. 


கொரோனாவால் தமிழகத்தில் மேலும் 57 பேர் பலியாகியுள்ளதால்,  இந்நோய் தொற்றுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 321 ஆக அதிகரித்துள்ளது.


நேற்று பலியான 57 பேரில், 35 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். இதனால், சென்னையில் கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 964 ஆக அதிகரித்துள்ளது. 


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 56 புள்ளி ஒன்பது நான்கு சதவீதம் பேர் குணமடைந்துள்ளதாக தெரிவித்தார்.


மேலும், தமிழகத்தில் கொரோனா தொற்று இதுவரை சமூக பரவலாக மாறவில்லை என கூறிய அமைச்சர் விஜயபாஸ்கர், அறிகுறி இருப்பவர்களுக்கும், அறிகுறி இல்லாதவர்களுக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் விளக்கம் அளித்தார். 


1 லட்சத்தை நெருங்கும் பாதிப்பு.. இன்று ஒரே நாளில் 3882 பேருக்கு தமிழகத்தில் கொரோனா.


சாத்தான்குளம்சாத்தான்குளம் வழக்கில் தேடப்பட்டு வரும் காவலர் முத்துராஜ், சரணடைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கில் ஏற்கனவே போலீசார் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக உள்ள முத்துராஜ் சரணடைய உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.கொரோனாவை எதிர்த்து போராடும் மருத்துவகள் மற்றும் செவிலியர்களை கவுரவிக்கும் வகையில் இந்த ஆண்டின் இறுதிவரை அவர்களுக்கு விமானத்தில் பயணிக்க 25% கட்டண சலுகை வழங்கப்படும் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் டி.சி. பூங்கா அருகே காந்தி சிலை திறப்பு


அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மாகாணத்தில், மகாத்மா காந்தியின் உருவச் சிலை திறந்து வைக்கப்பட்டது.


கடந்த ஜூன் மூன்றாம் தேதி அமெரிக்காவில் நடந்த போராட்டத்தின் போது, காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டது.


இதைத் தொடர்ந்து, அந்த  மாகாண துணை செயலர் ஸ்டீபன் மற்றும் இந்திய தூதர் தரண்ஜித் சிங் ஆகியோர் இந்தச் சிலையை திறந்து வைத்தனர்.