குறுஞ்செய்திகள் - கொரோனா


 


தமிழகத்தில் 1500ஐ கடந்த கொரோனா பலி எண்ணிக்கை!


விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை அடுத்த சேத்தூர் ஊரக காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக  கலங்கா பேரி பகுதியைச் சேர்ந்த அய்யனார் பணியாற்றி  வந்தார். 


 இந்நிலையில் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற பொழுது அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டு இருந்தார்.தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் இன்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


மும்பை : மஹாராஷ்டிராவில் கொரோனா பாதிப்புக்கு மேலும் 6,555 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அம்மாநிலத்தின் சுகாதாரதுறை


ஐதராபாத் : தெலுங்கானாவில் லேசான கொரோனா பாதித்தவர்களுக்கு வீட்டு தனிமைப் படுத்துதல் மூலமாக குணமடைந்தவர்களின் விகிதம் அதிகரித்து முன்னேற்ற பாதையில் மாநிலம் செல்வதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.


நாட்டில் கொரோனா வேகமாக பரவி வரும் வேளையில் 21 மாநிலங்களில் குணமடைவோர் விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக உள்ளது.


கொரோனா பாதிப்பு அதிகரித்து மேலும் 36 எல்லை பாதுகாப்பு படை வீரர்களுக்கு (பிஎஸ்எப்) கொரோனா உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்காக அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விளக்குவதற்காக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று  மாலை நேரில் சந்தித்தார்.


அப்போது, தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், ஊரடங்கு தளர்வுகள் மற்றும் கட்டுப்பாடுகள் குறித்தும் ஆளுநரிடம் முதலமைச்சர் விளக்கினார். மேலும், கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த அறிக்கையும் அவர் ஆளுநரிடம் சமர்ப்பித்தார்.