குறுஞ்செய்திகள் - தீவிரமடையும் கொரோனா பாதிப்பு.


 


தமிழகத்தில் கொரோனாவால் மேலும் 74 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 2,700 ஆக அதிகரித்துள்ளது. மார்ச் 1 முதல் சென்னையில் விடுபட்ட மேலும் 444 பேரின் உயிரிழப்பு கொரோனா உயிரிழப்புகளின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,144 ஆக அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் இன்று 4,910 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,31,583-ஆக அதிகரித்துள்ளது.


மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 37 ஆயிரத்தை கடந்தது. மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 10,576 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,37,607- ஆக அதிகரித்துள்ளது. இன்று ஒரே நாளில் 280 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 5552 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 1038 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,032 ஆக அதிகரித்துள்ளது. இன்று 204 பேரபி குணமடைந்துள்ள நிலையில் இதுவரை 6,165 பேர் வீடு திரும்பியுள்ளனர்.