கேரள தங்கக் கடத்தல் வழக்கு

 



கேரள தங்கக் கடத்தல் வழக்கு தொடர்பாக கேரள முதல்வரின் முன்னாள் முதன்மைச் செயலர் சிவசங்கரிடம் என்ஐஏ அதிகாரிகள் 28.07.2020 (செவ்வாய்க்கிழமை) 10 மணி நேரம் விசாரணை நடத்தினர்.


கொச்சியில் 27.07.2020 விசாரணைக்கு ஆஜரானார். அப்போது அவரிடம் 9 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், அவரை இன்று காலை ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டது. மேலும் கொச்சியிலேயே தங்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.


இந்த நிலையில் 28.07.2020 காலை 10 மணியளவில் அவர் விசாரணைக்கு ஆஜரானார். தொடர்ந்து 2-வது நாளாக அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை 10 மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது. இதையடுத்து, இரவு 8.30 மணியளவில் விசாரணை முடிந்து திரும்பினார் சிவசங்கர். அவர் தற்போது திருவனந்தபுரம் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


இதுபற்றி சிவசங்கரின் வழக்கறிஞர் தெரிவித்ததாவது: "என்ஐஏ யாரை விசாரிக்க வேண்டும் என்று நினைக்கிறதோ, அவர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கலாம். விசாரணை தொடக்க நிலையில்தான் உள்ளது. அடுத்து வரும் விசாரணைக்கும் சிவசங்கர் ஒத்துழைப்பு தருவார்."