கொரோனா நோய் தொற்று


தமிழகத்தை பொறுத்தவரையில் ஏற்கனவே 4 அமைச்சர்கள் உட்பட 18 எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்த நிலையில், தற்போது 19வது  எம்.எல்.ஏ-ஆக கீதா ஜீவனுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து அவர் தன்னை தானே வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டிருக்கிறார்.


மதுராந்தகத்தில் அரசு பேருந்து ஓட்டுனர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


திருவேற்காடு அருகே கீழ்அயனம்பாக்கத்தில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். கீழ்அயனம்பாக்கத்தில் 37 வயதான தேநீர் கடை உரிமையாளர், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த நிலையில் கொரோனா நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.


கோவில்பட்டியில் உள்ள தனியார் நூற்பாலையில் பணிபுரிந்து வரும் 85 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், விதிமுறைகளை மீறி ஆலை செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


கோவில்பட்டி இரயில்வே எதிரே தனியார் நூற்பாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நூற்பாலையில் 1110 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் கடந்த வாரம் கொரோனா பரிசோதனையானது மேற்கொள்ளப்பட்டது.


அப்போது அதில் சுமார் 85 தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது



புதுக்கோட்டை திமுக முன்னாள் எம்.எல்.ஏ பே.மாரியய்யா உடல் நலக்குறைவால் காலமானார். தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மாரியய்யா காலமாகியுள்ளார்.


மூத்த திமுக நிர்வாகிகள் மிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் 


* உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் கட்சிப் பணி, மக்கள் சேவை ஆற்ற முடியும்


- திமுக எம்எல்ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் மு.க.ஸ்டாலின் அறிவுரை


 



காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலையிலேயே திரண்ட கூட்டம்


சமூக இடைவெளியை காற்றில் பறக்க விட்டு மீன் வாங்க மக்கள் குவிந்துள்ளனர். கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் மீன் வாங்க மக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


நாளை முழு ஊரடங்கு என்பதால் வியாபாரிகளும் தனி மனித விலகலை கடைப்பிடிக்காமல் அல்டசியமாக உள்ளனர்.


 



ராமநாதபுரம் ஆயுதப்படை மைதானத்தில் காவலர்களுக்கு சமூக இடைவெளியுடன் யோகா பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. டிஐஜி மயில்வாகனன் அறிவுறுத்தலின் பேரில் சமூக இடைவெளியுடன் காவலர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.


___________________


நெல்லையில் அடிதடி தகராறில் சிக்கிய 3 ஆயுதப்படை காவலர்களை நெல்லை எஸ்.பி. மணிவண்ணன் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்