ஆந்திரா ஸ்டைல் பெப்பர் சிக்கன்

சாதம், நாண், சப்பாத்தி, தோசைக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த ஆந்திரா ஸ்டைல் பெப்பர் சிக்கன்.


இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :


சிக்கன் - அரை கிலோ
வெங்காயம் - 1
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் -2
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
தனியா தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
மிளகு - 3 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிதளவு


செய்முறை :


சிக்கனை நன்றாக சுத்தம் செய்து துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.


வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.


கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மஞ்சள் தூள் , இஞ்சி பூண்டு பேஸ்ட், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து நன்குக் கலந்து, ஃபிரிட்ஜில் 30 நிமிடங்கள் ஊற வையுங்கள்.


அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, ஏலக்காய்  கிராம்பு சேர்த்து தாளித்த பின்னர் கறிவேப்பிலை, வெங்காயம் சேர்த்து வதக்குங்கள்.


அடுத்ததாக பச்சை மிளகாய் சேர்த்து வதக்கியதும் ஊற வைத்துள்ள சிக்கனை சேர்த்து பிரட்டுங்கள்.


அடுத்ததாக தனியா பொடி, இடித்த மிளகுப் பொடி சேர்த்து சிறு தீயில் கிளறி விடவும்.


இறுதியாக 1/4 கப் தண்ணீர் ஊற்றி வேக வையுங்கள்.


பின் தண்ணீர் வற்றி சிக்கன் மென்மையாக வேகும் வரை கொதிக்க வையுங்கள்.


தண்ணீர் வற்றியதும் கொத்தமல்லி தூவி இறக்கிவிடுங்கள்.


பரிமாறும்போது ஒரு ஸ்பூன் எலுமிச்சை தூவி பிரட்டிவிட்டுப் பரிமாறுங்கள்.


சூப்பரான ஆந்திரா ஸ்டைல் பெப்பர் சிக்கன் ரெடி.


மற்றும் ஒரு சமையல் குறிப்புடன்


வணக்கம் அன்புடன் கார்த்திகா