உயிரிழந்த மயில் - சர்ச்சை விஸ்வரூபம்


கோவை எஸ்.ஐ.எச்.எஸ்., காலனி பிரதான ரோட்டில் உள்ள டிரான்ஸ்பார்மரில், நேற்று, 3 வயது மதிக்கத்தக்க பெண் மயில், சிக்கி உயிரிழந்தது. இதுகுறித்து சிங்காநல்லுார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.


அங்கு சென்ற போலீஸ் ஒருவர் தன்னார்வலர்களுடன் இணைந்து, உயிரிழந்த மயிலின் சடலத்தை மீட்டு, ரோட்டோரத்தில் வைத்து, அதன் மீது தேசியக் கொடியை போர்த்தி அஞ்சலி செலுத்தினார்.


' தேசியக் கொடியை போர்த்துவது என்றால், முறையாக சடலம் வைக்கப்பட்ட பெட்டியின் மீது தான் போர்த்தியிருக்க வேண்டும். அதை விடுத்து, சாலையில் மயிலின் சடலத்தை வைத்து தேசியக் கொடியை போர்த்தியதும், பின்னர் கொடியோடு உடலை சுற்றி சாக்குப்பையில் போட்டு வனத்துறையிடம் ஒப்படைத்ததும் விதிமீறல். தேசியக் கொடியை அவமதிக்கும் செயல்' என, சர்ச்சை எழுந்தது.


 


கர்நாடக மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதால், தமிழகத்தில் இருந்து சென்ற வாகனங்களை அம்மாநில போலீசார் திருப்பி அனுப்பினர். மீறி செல்ல முயன்றவர்களை தடியடி நடத்தி விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது


 


சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் உயிரிழந்த தந்தை, மகன் சாவு தொடர்பாக பென்னிக்ஸ் நண்பர்கள் 5 பேரிடம் சிபிசிஐ போலீசார் விசாரணை நடத்தினர்.