கொரோனா தொற்று

 



அரக்கோணத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் சூழலில் அங்கு போதிய தடுப்பு நடவடிக்கைகள் இல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். அரக்கோணத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கே போதிய பாதுகாப்பு இல்லாத நிலையில், நோயை கட்டுப்படுத்த அதிகாரிகள் எவ்வாறு? நடவடிக்கை எடுப்பார்கள் என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.



 


கொரோனா தாக்கத்தால் நாடு திரும்ப முடியாமல் ஈரானில் சிக்கி தவித்த 687 தமிழக மீனவர்கள் கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தனர். அவர்களை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு மற்றும் மாவட்ட ஆட்சியர் சதீப் நந்தூரி உள்ளிட்டோர் வரவேற்றனர்.



சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கொளத்தூர் பண்ணவாடி கிராமத்தில் செல்வம் என்பவர் கடந்த 21-ம் தேதி உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். அவரது இறுதிச்சடங்கில் பங்கேற்ற 2 மருத்துவர்கள் உள்பட 4 பேருக்கு முதலில் கொரோனா உறுதியானது. பின்னர் நடந்த பரிசோதனையில் இறுதிச்சடங்கில் பங்கேற்ற ஒரே கிராமத்தை சேர்ந்த மேலும் 58 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி கண்டறியப்பட்டுள்ளது.