மின் கட்டணத்தை எதிர்த்து - கறுப்பு கொடி ஏந்தி போராட்டம்“ஷாக் அடிப்பது மின்சாரமா? மின்கட்டணமா?. மக்கள் வீட்டில் இருந்ததற்காக அரசு போடும் அபராதத் தொகையா? என்று திமுக தலைவர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக உரையாற்றினார்.


கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டால் மக்கள் எந்த அளவுக்கு அதிர்ச்சியும் மனவேதனையும் அடைவார்களோ, அதை விட அதிகமாக ஒவ்வொரு வீட்டிற்கும் வந்திருக்கின்ற மின் கட்டணத்தைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். மின் கட்டணத்தைப் பார்த்தால் மின்சாரம் நமக்குள் பாய்ந்தது போல் இருக்கிறது.


வீட்டில் இருந்ததற்கு அரசாங்கம் போடுகின்ற அபராதத் தொகையாக இது? இல்லையென்றால், தண்டனையா? வீட்டில் இருந்தது தவறா? மின் பயன்பாடு என்பது பயன்படுத்துவதைப் பொறுத்து கூடும் குறையும்.


காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் நாளை (21ம் தேதி) மின்கட்டண உயர்வைக் கண்டித்து வீடுகளில் கருப்புக் கொடியேற்றி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.


அதிமுக அரசால் மின்கட்டணம் அதிகமாக வசுலிக்கபடுவதால் அதை கண்டித்து  நாளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி காஞ்சிபுரம் தெற்கு மாவட்டத்தில் திமுகவினர் தங்கள் வீட்டு முன்பு கருப்பு சட்டை அணிந்து கறுப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


இந்த மக்களின் குரலைக் கோட்டைக்குச் சொல்வதற்காகத்தான் வரும் 21-ம் தேதி செவ்வாய்க்கிழமை கறுப்புக்கொடி தாங்கி கண்டன முழக்கத்தை எழுப்பப் போகிறோம்.