குறுஞ்செய்திகள் - தீவிரமடையும் கொரோனா பாதிப்பு.


ஊத்துக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் கட்டுப்பாட்டில் 190 போலீசார் பணியாற்றி வருகின்றனர். இதில், முதல் கட்டமாக கடந்த ஏப்ரல் 30ம் தேதி 115 போலீசாருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 115 பேருக்கும் தொற்று இல்லை என தகவல் வந்தது.


ஆரணி சுகாதாரத் துறையினர் நேற்று ஆரணி காவல் நிலையத்திற்கு கிருமி நாசினி தெளித்து காவல் நிலையத்தை 2வது முறையாக மூடி சீல் வைத்தனர். இதனால், தற்போது காவல் நிலையம் அதே பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இயங்கி வருகிறது.


உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.36 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 536,720 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். 


கர்நாடகாவில் மேலும் 1,925 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


 சென்னையில் கொரோனா பரிசோதனை மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். முழு முடக்கம் காரணமாக சென்னையில் அடுத்த சில நாட்களில் கொரோனா பாதிப்பு குறைய வாய்ப்பு உள்ளது.


தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 62-ஆயிரத்தை கடந்தது. தமிழகத்தில் இன்று 2,186 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.