மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலைக்கு காவித்துண்டு



புதுச்சேரியில் உள்ள மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் சிலைக்கு காவித்துண்டு போர்த்தப்பட்டதற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.


தலைவர்களின் சிலைகளை அவமதிக்கும் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க புதுச்சேரி அரசுக்கு ஓபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.



திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே காந்திநகரில் நியாய விலைக்கடை விற்பனையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விற்பனையாளர் கலைமதி உள்பட 4 பேர் மீது சோழபுரம் போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. கடைக்கு ஆய்வு செய்ய வந்த வட்ட வழங்கல் அலுவலரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. வட்ட வழங்கல் அலுவலர் புகாரின் பேரில் சோழவரம் போலீஸ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.



மாநில அளவில் நடைபெற்ற தேசிய திறனாய்வு போட்டியில் வெற்றி பெற்ற மாணவி யோகப்பிரியாவுக்கு திருவண்ணாமலை ஆட்சியர் பாராட்டு தெரிவித்துள்ளார். ஆரணி அடுத்த அய்யம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மாணவி யோகப்பிரியாவுக்கு ஆட்சியர் கந்தசாமி பரிசளித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.


 



குடியாத்தத்தில் நாளை முதல் வரும் 31-ம் தேதி வரை பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. குடியாத்தத்தில் பிறப்பிக்கப்பட்ட முழு ஊரடங்கு உத்தரவு ரத்து செய்யப்படுவதாக ஆட்சியர் சண்முகசுந்தரம் அறிவித்துள்ளார்.