நடுரோட்டில் தீக்குளித்த இளைஞர்

ஆம்பூர்: `என் சாவுக்கு போலீஸ்தான் காரணம்!’ - நடுரோட்டில் தீக்குளித்த இளைஞர்தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளதால், வெளியில் வரும் வாகன ஓட்டிகள் மீது காவல்துறையினர் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுத்துவருகிறார்கள்.


திருப்பத்தூர் மாவட்டத்திலும், ஊரடங்கை மீறிய வாகனங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். ஆம்பூர் அண்ணாநகரைச் சேர்ந்த முகிலன் என்ற இளைஞர் பைக்கில் வெளியில் சுற்றியிருக்கிறார். தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள தியேட்டருக்கு அருகில் தணிக்கையில் ஈடுபட்டிருந்த போலீஸார், முகிலன் வந்த பைக்கை தடுத்து நிறுத்தினர். உரிய ஆவணங்கள் இல்லாத காரணத்தினால், போலீஸார் பைக்கை பறிமுதல் செய்து அருகில் உள்ள மைதானத்தில் நிறுத்தியுள்ளனர்.


ஆத்திரமடைந்த அந்த இளைஞர் அருகில் உள்ள உறவினரின் வீட்டுக்கு நடந்தேச் சென்று மண்ணெண்ணெய்யை தன் உடலில் ஊற்றிக் கொண்டார். கையில் தீப்பெட்டியை எடுத்துக் கொண்டு போலீஸார் இருந்தப் பகுதியில் வந்து கொளுத்திக் கொண்டார். தீ மளமளவெனப் பரவியதால், நடுரோட்டிலேயே அங்கும் இங்குமாக அலறி அடித்தபடி ஓடினார். பொதுமக்கள் அவர் மீது போர்வையை போர்த்தி தீயை அணைத்தனர். பலத்த தீக்காயமடைந்த அந்த இளைஞரின் குமுறலை சுற்றியிருந்த பலர் செல்போனில் வீடியோவாக பதிவுசெய்தனர்.வீடியோவில், ``என் சாவுக்கு போலீஸ்தான் காரணம். சும்மா போறவனை பிடிச்சாங்க. அதான் கொளுத்திக்கிட்டேன்’’ என்று குற்றம்சாட்டி வலியால் துடிக்கிறார் அந்த இளைஞர். பின்னர், ஆம்புலன்ஸ் மூலம் மீட்கப்பட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 90 சதவிகிதம் தீக்காயம் ஏற்பட்டிருந்ததால் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் சி.எம்.சி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். 


`போலீஸார் மீது தவறு இருக்கிறதா?’ என்பதுகுறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
எஸ்.பி விஜயகுமார்


மது போதையில் இருப்பதாகக் கூறினார். சி.எம்.சி மருத்துவர்களும் அவர் மது போதையில் இருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். முதற்கட்ட விசாரணையில் இந்த தகவல்தான் கிடைத்திருக்கிறது. வேறு எந்த விதமான ஆதாரங்களும் கிடைக்கவில்லை. தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’’ என்றார்.


தீக்குளித்த இளைஞர் முகிலனுக்குத் திருமணமாகி மூன்று பிள்ளைகள் உள்ளனர். தனியார் தொழிற்சாலையில் வேலை செய்துவந்துள்ளார். அவரது விபரீத முடிவு, போலீஸாரைப் பதற வைத்திருக்கிறது.