தமிழகத்தில் தான் சிறப்பான சிகிச்சை-முதல்வர் இ.பி.எஸ்


கொரோனாவுக்கு தமிழகத்தில் தான் சிறப்பான சிகிச்சை அளிக்கப்படுகிறது என முதல்வர் இ.பி.எஸ்., கூறியுள்ளார்.

ஈரோட்டில் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு செய்த பின்னர் முதல்வர் இ.பி.எஸ்., பேசியதாவது: தமிழகத்தில் கொரோனாவுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் தேவையான உபகரணம் உள்ளது. கட்டுப்பாட்டு பகுதிகளில் சுகாதார பணிகள் முழுவீச்சில் நடக்கிறது.

ஈரோடு முழுவதும் கொரோனா பணி சிறப்பாக நடந்து வருகிறது. கடந்த 15ம் தேதி வரை 57,737 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. 2 அரசு கொரோனா பரிசோதனை மையங்கள் உள்ளது. மாவட்டத்தில் 4,480 படுக்கைகள் தயார் உள்ளது. 868 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. தெருத்தெருவாக கிருமிநாசினி தெளிக்கும் பணி நடக்கிறது. ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.


தமிழக அரசின் நடவடிக்கையால் கொரோனா காரணமாக உயிரிழப்பு குறைந்துள்ளது. இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான் அதிக பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் ஒத்துழைப்பு அளித்தால், தான் பாதிப்பை குறைக்கும்.


இனி எந்த மாவட்டமும் பிரிக்கப்படாது. சேலத்தை பிரிக்கப்போவதாக வெளியான தகவல் தவறு.


கொரோனா காலத்திலும் தான் தமிழகம் தான் அதிக முதலீடு ஈர்த்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.கொரோனா தொற்று காரணமாக, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கூட்டுறவு துறை அமைச்சர் ராஜு குணமாகி வீடு திரும்பினார்.