முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க கூட்டம் கூடக்கூடாது -


ஆடி அமாவாசையையொட்டி காவிரி கரையோர பகுதிகளில் மக்கள் கூட்டம் கூடினால் நடவடிக்கை


முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க அம்மா மண்டபம், காவிரி கரையோர படித்துறைகளில் கூட்டம் கூடக்கூடாது


- திருச்சி காவல் ஆணையர்



மக்கள் பிரதிநிதிகளுக்கே பாதுகாப்பில்லாத அளவுக்குச் சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘’மக்கள் நலப்பணியில் ஈடுபட்டிருந்த தி.மு.கழகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் பரமகுரு படுகொலை செய்யப்பட்டிருப்பது நம் நெஞ்சத்தைப் பதற வைக்கிறது. தமிழகத்தை ஆளும் முதலமைச்சர் திரு. பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசின் நிர்வாக அலட்சியமும், சட்டம் ஒழுங்கு சீர்கேடும் வெட்டவெளிச்சமாகியுள்ளது.