வெடிகுண்டு புரளி


நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்மநபர் தொலைபேசியில் மிரட்டல் விடுத்துள்ளார்.


சாலிகிராமம் மற்றும் விருகம்பாக்கத்தில் உள்ள விஜய்க்கு சொந்தமான வீடுகளில் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தினர்.


சோதனையின்போது வெடிகுண்டு எதுவும் சிக்காததால் தொலைபேசியில் பேசிய மர்மநபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 


உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.32 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 532,861 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். 


தமிழகத்தில் மேலும் 4,280 பேருக்கு கரோனா; 65 பேர் பலி


விதிமுறைகளுக்கு உட்பட்டே கரோனா தடுப்பு மருந்து பரிசோதனை: ஐசிஎம்ஆர்சென்னையில் திங்கள்கிழமை (ஜூலை 6) முதல் தளா்வுகளுடன் கூடிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்தக் காலத்தில் அத்தியாவசியப் பொருள்களை விற்பனை செய்யும் மளிகை, காய்கறி கடைகள், தேநீா் கடைகள் அனைத்தும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்துள்ளாா்


வணிக வளாகங்கள் தவிா்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (ஜவுளி, நகை போன்றவை) ஏற்கெனவே அறிவித்து இருந்த வழிமுறைகளுடன் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம். பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தனது அறிவிப்பில் முதல்வா் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளாா்.


 சாத்தான்குளம் தந்தை -மகன் கொலை வழக்கில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தநிலையில், இதற்கு தடை விதிக்க கோரிக்கை எழுந்துள்ளது


விழுப்புரம் மாவட்டத்தில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதித்து மாவட்ட எஸ்.பி. ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து, திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர் ஆகிய 5 மாவட்டங்களில் பிரெண்ட்ஸ் ஆஃப் போலீசுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.