சென்னை போலீஸ் கமிஷனராக மகேஷ்குமார் அகர்வால்


ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் புதிய சென்னை போலீஸ் கமிஷனர்.


ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால், பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். 1972-ம் ஆண்டு பிறந்த மகேஷ்குமார் அகர்வாலின் தந்தை, வழக்கறிஞர். அதனால் சட்டம் பயின்ற அவர், தன்னுடைய 22-ம் வயதில் 1994-ம் ஆண்டு, சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சிபெற்று ஐபிஎஸ் அதிகாரியானார்.


மகேஷ் குமார் அகர்வால் 1994 தொகுதி இந்திய போலீஸ் வழங்குநர் அதிகாரி. ஏ.டி.ஜி.பி (செயல்பாடுகள்) பகுதியாக பணியாற்றுவதற்கு முன்பு, அவர் இயக்ககத்தில் பல்வேறு உயர் தர பதவிகளில் பணியாற்றியுள்ளார்.


தேனி எஸ்பி-யாக இவர் பணியாற்றி, பின்னர் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி-யாக இடமாற்றம் செய்யப்பட்டார். அதன்பிறகு, 2001-ம் ஆண்டு சென்னைக்கு இடமாறுதல் செய்யப்பட்டார்.


சென்னை பூக்கடை துணை கமிஷனராக நியமிக்கப்பட்ட மகேஷ்குமார் அகர்வால், போக்குவரத்து பிரிவில் துணை கமிஷனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.


அயல்பணியாக சிபிஐ அதிகாரியாக 10 ஆண்டுகள் பல மாநிலங்களில் பணியாற்றினார். அதன்பிறகு மீண்டும் சென்னைக்கு மாறுதலாகினார்.ஐஜி-யாக சிபிசிஐடி-யில்பணியாற்றினார்.


அவர் குற்றவியல் துறை - குற்றவியல் விசாரணை அலுவலகத்தில் சட்ட அமலாக்க ஆய்வாளர் தரத்தில் பணியாற்றியுள்ளார். அதற்கு முன்னர் அவர் மதுரை நகர போலீஸ் கமிஷனராகவும் இருந்தார்.


அடுத்து சென்னை தெற்கு மண்டல கூடுதல் கமிஷனராகப் பணியாற்றினார்.


சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் விடுப்பில் சென்ற காலக்கட்டத்தில், போலீஸ் கமிஷனர் பொறுப்பையும் கவனித்துவந்தார்.


பின்னர், டிஜிபி அலுவலகத்தில் (operation) செயலாக்கப்பிரிவு ஏடிஜிபி-யாகப் பணியாற்றிவந்தார்.


கொரோனா தடுப்பு வடக்கு மண்டல அதிகாரியாகவும் நியமிக்கப்பட்டிருந்தார்.


தற்போது அவர், சென்னை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.


சிறப்பாக துப்பு துலக்கிய சம்பவம்பணமதிப்பிழப்பு சமயத்தில், சேலத்திலிருந்து சென்னைக்கு வந்த ரயிலில் 5.78 கோடி ரூபாய் மேற்கூரை துளையிடப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டது.  மகேஷ்குமார் அகர்வால் தலைமையிலான சிபிசிஐடி போலீஸ் டீம் மூலம் குற்றவாளிகளைப் பிடித்தார். 


இந்து மதத் தலைவர்கள் கொலை வழக்கு, சென்ட்ரல் ரயில் நிலைய குண்டுவெடிப்பு வழக்கு, சென்னை சிறுசேரியில் பணியாற்றிய பெண் இன்ஜினீயர் உமாமகேஸ்வரி கொலை வழக்கு ஆகியவற்றில் மகேஷ்குமார் அகர்வால் தலைமையிலான டீம் சிறப்பாகச் செயல்பட்டது.


மகேஷ்குமார் அகர்வாலின் திறமைக்கு சென்னை போலீஸ் கமிஷனர் பதவி பரிசாகக் கிடைத்துள்ளது என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் .