கொத்தவால்சாவடி சந்தை இடம் மாற்றம்


கொத்தவால் சாவடி சந்தை பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தனி மனித இடைவெளி, கூட்ட நெரிசலை தடுக்க கொத்தவால்சாவடி சந்தை இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது. 


 தேனி மாவட்டத்தில் மேலும் 134 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். மேலும் மாவட்ட முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,863 ஆக உயர்ந்துள்ளது.நாமக்கல்லில் கொள்முதல் செய்யும் முட்டையின் விலை 10 காசுகள் உயர்ந்து ரூ.3.60 ஆக நிர்ணயத்துள்ளது. சில்லறை விற்பனையில் சென்னையில் ஒரு முட்டை ரூ.3.80-க்கு விற்கப்படுகிறது.