கொரோனா வைரசின் தாக்கம்


இந்தியாவில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமான மாநிலங்களில் மஹாராஷ்டிரா முன்னிலையில் உள்ளது. மஹாராஷ்டிரா மாநிலத்தில் நோய் பாதிப்பு அதிகரிக்கும் பகுதிகளாக மும்பை, தாராவி, நாக்பூர் மற்றும் நவிமும்பை ஆகிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. குடிசை பகுதிகள் அதிகமுள்ள தாராவியில் கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. 


இந்தியாவில், கொரோனா தொற்று  அதிவேகமாக அதிகரித்து நேற்று (ஜூலை 17) 10 லட்சத்தை தொட்டுள்ளது.நாட்டில் தொற்று வேகமாக பரவி வருவதை காட்டுகிறது.

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக, நேற்று ஒரே நாளில் 24,956 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால், தொற்று உறுதியானவர்களின் எண்ணிக்கை இன்று 10 லட்சத்தை தாண்டியது. மேலும் 687 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கையும் 25.602 ஆனது. மத்திய சுகாதார அமைச்சகத்தின் புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவில் 3, 42, 473 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 6,35,756 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.


டில்லியில் கொரோனா அதிகரிப்பு நிலையாக மாறினாலும், கர்நாடகா, தெலுங்கானா, உத்தரபிரதேச மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது.