சூரிய வழிபாடு

 


 நமது  உண்மை  செய்திகள் ஆன்மீக குழுவிலிருந்து சூரிய வழிபாடும், சூரியன் வழிபட்ட சிவாலயங்களும் பற்றிய தகவல்கள் :


சூரியனுக்கு ஞாயிறு, பரிதி, கதிரவன், பாஸ்கரன் என்ற பெயர்களும் உண்டு.


சூரியனுக்கு சஞ்சிகை, சாயாதேவி, சரூசினி போன்ற மனைவியர் பலர் உண்டு என புராணங்கள் கூறுகின்றன.


யமன், யமுனை, அஸ்வினி தேவர்கள், சனி, பத்திரை, பிருகு, வான்மீகர், கர்ணன், சுக்ரீவன் போன்ற புதல்வர்கள் பலர் உண்டு.


சூரியன் வழிபட்ட சிவாலயங்கள் :


1.பரிதி நியமம்,
2.வைதீஸ்வரன் கோயில்,
3.கருப்பறியலூர் (தலை ஞாயிறு)
4.மயேந்திரப்பள்ளி, 
5.திருமாந்துறை,
6.திருமங்கலக்குடி, 
7.குடவாசல், 
8.நெல்லிக்கா
9.திருஆடானை,
10.திருக்கண்டியூர்,
11.திருச்சோற்றுத்துறை
12.திருமீயச்சூர், 
13.திருமேலைத் திருக்காட்டுப்பள்ளி, 
14.திருச்சுழியல்,
15.வலிவலம், 
16.தேவூர், 
17.திருவாய்மூர், 
18.திருப்புனவாயில், 
19.நன்னிலம் 
20.பூந்துருத்தி, 
21.காஞ்சிபுரம், 
22.திருகேதாரம்
 
இன்னும் பல சிவாலயங்களில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் சிவபெருமான் வழிபட்டு கிரகபதமும், ஆயிரம் கிரணங்களோடு‌ விளங்கும் பேற்றினையும் சூரியன் பெற்றான்.


சூரியன் சிவபெருமானது வலது கண்ணாகவும் திகழ்பவர்.


சைவசமய பண்பாட்டின் சிகரமாக விளங்குபவை நமது ஆலயங்கள். அற்புதமான அமைப்பைக் கொண்டிருக்கும் ஆலயங்களில் ஒரு அதிசயமாக விளங்குபவை சூரியன் வழிபட்ட தலங்கள் ஆகும்.


 சூரிய வழிபாடு :


சூரியன் வழிபட்ட சிவாலயங்களுக்கு சென்று  தொழுவதால் பாவம் தொலையும்; புண்ணியம் சேரும்; ஆக இது இனி வரும் பிறவிகளுக்கான நல்ல ஒரு அஸ்திவாரமாக அமையும்.


சூரிய வழிபாடு உடல் நலத்தை வாழ்நாள் முழுவதும் சீராக இருக்கச் செய்து பூரண ஆயுளை நல்கும். சூரிய நமஸ்காரம் நல்ல பல உடற்பயிற்சிகளை முறையாகத் தொகுத்து நம்மை மேம்பட வைக்கும் ஒரு யோகா பயிற்சி.


சூரிய வழிபாடு எதிரிகளை அழிக்கும். புற எதிரிகளையும் அழிக்கும், அகத்திலே தோன்றுகின்ற காம, குரோதம் போன்றவற்றையும் அகற்றும். பரம மங்களகரமானது. ஐஸ்வர்யத்தையும், பல சித்திகளையும் நல்க வல்லது.


இரவும் பகலும் சம கால நேரங்களாக வரும் மார்ச் 21 மற்றும் செப்டம்பர் 21 ஆகிய நாட்களில் (Spring and Autumnal Equinoxes) சூரிய ஒளி நேராக மூலக் கோயிலில் விழுகிறது. அதாவது சூரிய பூஜை நிகழ்கிறது.


இப்படி சூரிய ஒளி நேராக கர்பக்கிரகத்தில் விழுந்து சூரியன் இறைவனை பூஜிக்கும் தலங்கள் தமிழகத்தில் ஏராளம் உண்டு.


இதுபோன்ற பல பயனுள்ள தகவல்களுடன் மேலும் நமது   உண்மை செய்திகள் ஆன்மீக பயணம் தொடரும்.நன்றி.  ஓம்  நமசிவாய  
பக்தியுடன்  மோகனா  செல்வராஜ்