கொரோனா தொற்று--தி.மு.க., எம்.எல்.ஏ


தமிழகத்தில் அமைச்சர்கள் உள்பட இதுவரை 21 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு கரோனா தொற்று உறுதி ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


நாகர்கோவில் மாநகர திமுக செயலாளர் வக்கீல் மகேஷுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


இவர்களுடன் மக்கள் பணிகளில் ஈடுபட்ட நாகர்கோவில் தொகுதி திமுக எம்.எல்.ஏ சுரேஷ்ராஜன் கொரோனா அறிகுறிகள் இல்லாத போதிலும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருந்தார்.


மேலும் அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். இதில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதுதமிழகத்தில்  ஒரேநாளில் 6,993 பேருக்கு தொற்று உறுதி;  தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரேநாளில் 6,993 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில்  கரோனா பாதிப்பு குறித்த விவரங்களை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில்  புதிதாக 6,993 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 


இதையடுத்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 2,20,716 ஆக உயர்ந்துள்ளது.கொரோனா ஊரடங்கு உத்தரவால், பிளஸ் 2 தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கான தேர்வு, திருவள்ளூர் மாவட்டத்தில் 22 மையங்களில் நேற்று நடைபெற்றது.


கொரோனா ஊரடங்கு உத்தரவால் கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி  நடந்த பிளஸ் 2 வேதியியல், கணக்கு பதிவியல், புவியியல் பாடங்களுக்கான தேர்வுகளில் சில மாணவர்கள் பங்கேற்கவில்லை.


இதையொட்டி தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கான தேர்வு நடைபெற்றது.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 5 கல்வி மாவட்டங்களில், திருவள்ளூர் ஞான வித்யாலயா பள்ளி உட்பட 22 தேர்வு மையங்களில், கடந்த கல்வியாண்டில் பயின்ற மாணவர்கள், தனி தேர்வர்கள் என மொத்தம் 72 பேர் நேற்று தேர்வெழுதினர்.


தேர்வு எழுத வந்த மாணவர்களுக்கு உரிய பரிசோதனை செய்து தேர்வு மையத்துக்குள் அனுமதிக்கப்பட்டனர்.