குறுஞ் செய்திகள்

 சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் எஸ்.ஐ. ரகுகணேஷ் கைது செய்யப்பட்டுள்ளார்.எஸ்.ஐ. ரகுகணேஷ் நேற்று இரவில் கைது செய்து மாவட்ட முதன்மை நீதிபதி முன் ஆஜர் செய்யபட்டார். தொடர்ந்து, எஸ்.ஐ. ரகுகணேஷ்க்கு 15 நாள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு தூத்துக்குடி மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார். 


சாத்தான்குளம் தந்தை மகன் மரண வழக்கில் சாட்சியம் அளித்த பெண் காவலரிடம் சிபிசிஐடி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார். சாத்தான்குளம் காவல்நிலையத்தில் ஆஜரான பெண் காவலரிடம், சிபிசிஐடி ஆய்வாளர் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


எஸ்.ஐ. பாலகிருஷ்னன், காவலர்கள் முத்துராஜ், முருகன் உள்ளிட்ட 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். ஊரடங்கை மீறியதாக கைதான தந்தை ஜெயராஜ், மகன் பென்னிக்ஸ் காவல்துறை விசாரணையில் உயிரிழந்தனர்.உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5.18 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 518,921 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 10,802,849 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 5,938,954 பேர் குணமடைந்துள்ளனர். சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் இருந்து 20 வயது கொரோனா நோயாளி தப்பி ஓடினார். தப்பி ஓடிய கொரோனா நோயாளி ரூ.61 லட்சம் கொள்ளையடுத்த வழக்கில் கைதானவர். கைதிக்கு கொரோனா உறுதியானதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தப்பி ஓடினார்.


மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் மட்டும் 5,537 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,80,298 ஆக அதிகரித்துள்ளது.தினசரி ஆவின் பால் விற்பனை 22.50 லட்சம் லிட்டரில் இருந்து 25 லட்சம் லிட்டராக அதிகரித்துள்ளது என ஆவின் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.