ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை: படமாகிறது

ஜெயலலிதாவின் வாழ்க்கை: தெலுங்கு மொழியில் படமாகிறதுதிருப்பதி ஏழுமலையானை ராகேஷ் ரெட்டி வெள்ளிக்கிழமை காலை தரிசித்தார். அதன் பின் அவர் கோயிலுக்கு வெளியே செய்தியாளர்களிடம் கூறியது:


பல நாள்களுக்குப் பின் ஏழுமலையான் தரிசனம் கிடைத்தது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எனது வேண்டுதல் நிறைவேறியது. 


கரோனா பாதிப்பு காரணமாக திரைப்படத் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த பாதிப்பிலிருந்து இத்தொழில் மீண்டுவர வேண்டும் என்று ஏழுமலையானிடம் வேண்டிக் கொண்டேன். 


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை குறித்த தெலுங்கு திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளதாக ஆந்திர படத் தயாரிப்பாளர் ராகேஷ் ரெட்டி தெரிவித்தார்.


மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கையை திரைப்படமாக எடுத்து வருகிறோம்.


அவர் முதல்வராக பொறுப்பேற்ற பின் அவரது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள் அதில் இடம்பெறுகின்றன. விரைவில் இப்படம் வெளிவர உள்ளது என்றார் அவர்.