ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா

 ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழாவில் தங்கத் தேர் இழுக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வரும் 24-ம் தேதி நடைபெறவுள்ள விழாவில் கோயில் வளாகத்திற்குள்ளேயே தங்கத் தேரை இழுக்க தமிழக இந்து அறநிலையத்துறை ஆணையர் பணீந்திர ரெட்டி அனுமதி வழங்கியுள்ளார்.


பக்தர்கள் இன்றி 9 நாட்கள் திருவிழாவை அர்ச்சகர் மட்டும் நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.ஜெயராஜ், பென்னிக்ஸ் காயங்கள் குறித்து கோவில்பட்டி கிளை சிறை கைதி ராஜாசிங் என்பவர் தூத்துக்குடி மாவட்ட நீதிபதியிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.


சிறையில் ஜெயராஜ், பென்னிக்ஸ் காயங்களுக்கு மருந்திடப்பட்டது. காவல்துறை நண்பர்களும் தங்களை தாக்கியதாக ஜெயராஜ் கூறியதால் ராஜா சிங் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.


கோவில்பட்டி சிறைக்கு வந்த போது ஜெயராஜ், பென்னிக்ஸ்க்கு காயங்கள் இருந்ததாக கைதி ஒருவர் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.