சுகாதாரத்தறை செயலாளர் ராதாகிருஷ்ணன் குடும்பம் - கொரோனா தொற்று உறுதி


தமிழக சுகாதாரத்தறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்களின் மனைவி மற்றும் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இருவரும்  கிண்டியில் உள்ள  கிங் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


ராதா கிருஷ்ணனின் மாமனார் மற்றும் மாமியாருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.


 தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி அமுதா பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். உத்தராகண்ட் முசோரியில் உள்ள ஐஏஎஸ் அகாடமியில் விரிவுரையாளராக உள்ள அமுதாவுக்கு மத்திய அரசு பதவி வழங்கியுள்ளது.சென்னை - சேலம் இடையேயான 8 வழி பசுமைச் சாலைத் திட்டம் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த அறிவிப்பாணையை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திட்ட (அமலாக்கப் பிரிவு) இயக்குநர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை அடுத்த வாரத்திற்கு உச்சநீதிமன்றம் தள்ளிவைத்தது.