கத்தரிக்காய் வருவல்

கத்தரிக்காய் பிடிக்காதவர்களைக் கூட சாப்பிடத் தூண்டும் சுவையில் ’கத்தரிக்காய் வருவல்’ : செய்முறை இதோ...கத்தரிக்காய் குழம்பு வைக்க மட்டுமல்ல பொரியல் செய்தும் ஜம்முனு தொட்டுக்கலாம். அதற்கு இந்த பக்குவத்தில் செய்யுங்கள். ருசியாக இருக்கும்.


தேவையான பொருட்கள் :


கத்தரிக்காய் - 5


வெங்காயம் - 1


நல்லெண்ணெய் - 4 tsp


மிளகாய் தூள் - 1 tsp


தனியா தூள் - 1 tsp


சீராக தூள்   1/2 tsp 


மஞ்சள் - 1/4 tsp


செய்முறை :


கத்தரிக்காய்களை நீள வாக்கில் நறுக்கிக்கொள்ளுங்கள்.


வெங்காயம் பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள்.


கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும்  உளுத்தம்  பருப்பு  சேர்த்து பொறிக்க விடுங்கள். பின் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.


வதங்கியதும் கத்தரிக்காய் சேர்த்து பிரட்டவும். சற்று சுருங்கியதும், அனைத்து பொடிகளையும் சேருங்கள்.கறி வேப்பிலை மற்றும்  உப்பும் சேர்த்துக்கொள்ளுங்கள்.


மசாலா நன்கு கலக்கும் வரை பிரட்டுங்கள். தற்போது கால் டம்ளர் தண்ணீர் ஊற்றுங்கள். மீண்டும் பிரட்டிவிட்டு தட்டு போட்டு மூடி விடுங்கள்.


சிறு தீயில் வைத்து 10 நிமிடம் கழித்து திறந்து மீண்டும் கிளறுங்கள். கத்தரிக்காய் நன்கு சுருங்கி மசாலா கலந்ததும் அடுப்பை அனைத்துவிடுங்கள்.அவ்வளவுதான் சுவையான கத்தரிக்காய் வருவல் தயார்.


தொகுப்பு  மோகனா  செல்வராஜ்