அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் கொரோனா


பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு கொரோனா தொற்று பரவிய செய்தி அறிந்து, பாலிவுட் முதல் கோலிவுட் வரை பல பிரபலங்கள் மற்றும் பல கோடி ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.


1985ம் ஆண்டு வெளியான கெராஃப்தார் படத்தில் அமிதாப் பச்சன் உடன் இணைந்து நடித்துள்ள கமல்ஹாசன் தற்போது அமிதாப் பச்சன் பூரண நலத்துடன் மீண்டும் பழையபடி குணமடைவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சனுக்கு கொரோனா.. விரைவில் குணமடைய இந்திய திரையுலகமே பிரார்த்தனை!  ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயா பச்சனுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை.


இந்நிலையில், தற்போது நடிகர் கமல்ஹாசனும் அமிதாப் பச்சன் விரைவில் குணமடைய வேண்டும் என ட்வீட் போட்டுள்ளார்.இந்திய மருத்துவர்களை நம்புகிறேன்


இரண்டு பச்சன்களுமே விரைவில் பூரண நலம் பெற்று விடு திரும்ப வேண்டும் என்றும், இந்திய மருத்துவர்களை நான் நம்புகிறேன், உடல் உபாதைகளை வென்று சீனியர் பச்சன் மீண்டு வருவார், மீண்டும் ஒருமுறை தன்னால் மீண்டு எழ முடியும் என்பதை அமிதாப் பச்சன் உணர்த்துவார் என நடிகர் கமல்ஹாசன் தனது ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்.