கல்வி தொலைக்காட்சி- முதலமைச்சர் தொடங்கி வைத்தார்


கல்வி தொலைக்காட்சியின் மூலம் மாணவர்களுக்கு பாடம்:


தமிழக அரசின் கல்வி தொலைக்காட்சியின் மூலம் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் பயன்பெறும் வகையில், திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரண்டரை மணிநேரம் சிறப்பு கல்வி நிகழ்ச்சிகளின் ஒளிபரப்பையும் மற்றும் பிற வகுப்புகளின் பாடங்களுக்கான ஒளிபரப்பையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தொடங்கி வைத்தார்


ஆன்லைன் வகுப்புகளை நடத்த நேரக் கட்டுப்பாடு:


பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளை எந்தெந்த வகுப்புகளுக்கு, எவ்வளவு நேரம் நடத்தலாம் என்பது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை நேற்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.


அதன்படி எல்கேஜி, யுகேஜி மாணவர்களுக்கு 30 நிமிடத்திற்கு மிகாமல் ஆன்லைன் வகுப்பு நடத்த வேண்டும் என்றும்,


1 முதல் 8ஆம் வகுப்பு வரை அதிகபட்சம் தலா 45 நிமிடம் என்ற அளவில் 2 வகுப்புகளை எடுக்கலாம் என்றும்,


9 முதல் 12ஆம் வகுப்பு வரை அதிகபட்சம் தலா 30-45 நிமிடம் என்ற அளவில் 4 வகுப்புகளை எடுக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.