அதிமுக எம்பிகளாக பதவியேற்றவர்க்கு முதல்வர் வாழ்த்து

 அதிமுக எம்பிகளாக பதவியேற்ற 3 பேருக்கு முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது; மாநிலங்களின் தேவைகளை மத்தியில் எடுத்துரைத்து மக்கட்பணியாற்ற, மாநிலங்களவை உறுப்பினர்களாக இன்று பொறுப்பேற்றிருக்கும் திரு.கே.பி.முனுசாமி அவர்கள், டாக்டர் மு.தம்பிதுரை அவர்கள் மற்றும் திரு.ஜி.கே.வாசன் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.+2 மாணவர்களுக்கான மறு மதிப்பீடு, மறுக்கூட்டலுக்கான அறிவிப்பை வெளியிட வேண்டும் என திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார். தாமதம் செய்வதால் மாணவர்களின் எதிர்கால வாழ்வு கேள்விக்குறியாகும் என பள்ளிக்கல்வித்துறைக்கு தங்கம் தென்னரசு வலியுறுத்தியுள்ளார்.